பாபநாசத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
பாபநாசத்தில் பள்ளி மாணவ-மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
கபிஸ்தலம்,
பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள் தலைமையில் நடந்தது. அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் வரவேற்று பேசினார்.
அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சூரியநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பாபநாசம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், பாபநாசம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன், நகர வங்கி தலைவர் சபேசன், நகர வங்கி இயக்குனர்கள் சின்னையன், பாலு, துணைத் தலைவர் சதீஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் துரைக்கண்ணு
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பாபநாசம் அரசு ஆண்கள் பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, வழுத்தூர் சவுகத் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, அய்யம்பேட்டை அரசு பள்ளி, புள்ளபூதங்குடி அரசு பள்ளி, பசுபதிகோவில் புனித கபிரியேல் உயர்நிலைப் பள்ளி, வீரமாங்குடி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 1252 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
மாவட்ட கவுன்சிலர் கண்ணபிரான், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செரீப், ஒன்றிய கவுன்சிலர் முருகன், அமுதா சிவசுப்பிரமணியன், உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முதுநிலை ஆசிரியர் லோகநாதன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story