கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தரங்கம்பாடியில் நடந்தது
தரங்கம்பாடியில், கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொறையாறு,
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் மதிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் வட்ட தலைவர் மரியஜோசப்ராஜ், தனி தாசில்தார் (நில எடுப்பு பிரிவு) சபிதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் வாசுகி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வட்ட செயலாளர் ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின்போது, கடலூர் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கடைபிடித்து வரும் ஊழியர்கள் விரோத போக்கை நிறுத்த வேண்டும். கடலூர் கலெக்டர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசனின், இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறை அமைச்சர் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி கலைவாணி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story