நல்லம்பள்ளி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் சாவு


நல்லம்பள்ளி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் சாவு
x
தினத்தந்தி 27 Feb 2020 3:45 AM IST (Updated: 27 Feb 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி இறந்தார்.

நல்லம்பள்ளி,

பெங்களூருவில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் கேரளாவுக்கு புறப்பட்டது. இந்த லாரியை கேரளாவை சேர்ந்த சுமிஷ் (வயது44) என்பவர் ஓட்டி சென்றார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் மேம்பாலத்தில் நேற்று அதிகாலை இந்த லாரி வந்தது.

அப்போது முன்னால் சிமெண்டு பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரி மீது, மக்காச்சோளம் ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சுமிஷ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று சுமிசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story