கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி: சிவன் கோவில் நவீன முறையில் இடமாற்றம்


கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி: சிவன் கோவில் நவீன முறையில் இடமாற்றம்
x
தினத்தந்தி 27 Feb 2020 5:27 AM IST (Updated: 27 Feb 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

கிழக்குகடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் இடமாற்றம் செய்யப்படுகிறது.

மரக்காணம்,

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியில் மரக்காணம் அருகே அமைந்துள்ளது செட்டி நகர் கிராமம். கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் தர்ம லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. தற்போது இப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. எனவே இந்த சிவன் கோவிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாலையை அகலப்படுத்த கிராம பொது மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் முடிவு செய்தனர்.

ஜாக்கிகள் மூலம்...

இதைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்த பணி தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 60 மீட்டர் தூரத்துக்கு பின் நோக்கி நகர்த்தி வைக்கும் பணி நவீன கருவிகள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1000 ஜாக்கிகள் மூலம் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வருகிற மே மாதம் சித்ரா பவுர்ணமி நாளில் இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story