சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை; 2 கிலோ தங்கமும் கிடைத்தது
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களால், அங்குள்ள உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் இரண்டு முறை கோவில் நிர்வாகம் சார்பாக எண்ணப்படுவது வழக்கம்.
சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் இரண்டாவது முறையாக காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்காவல் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் காணிக்கையாக 1 கோடியே 21 ஆயிரத்து 233 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 924 கிராம் தங்கமும், 3 கிலோ 988 கிராம் வெள்ளியும் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, குவைத், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 211 வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story