ஆசனூர் அருகே 20 அடி பள்ளத்தில் பாய்ந்த டேங்கர் லாரி லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்
ஆசனூர் அருகே 20 அடி பள்ளத்தில் டேங்கர் லாரி பாய்ந்தது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்.
ஈரோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரளவாடியில் உள்ள பால் குளிரகத்துக்கு பால் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேலத்தை சேர்ந்த சண்முகம் (வயது 43) என்பவர் ஓட்டினார்.
20 அடி பள்ளத்தில்...
தாளவாடிைய அடுத்த ஆசனூர் செம்மண் திட்டு அருகே மதியம் 12 மணி அளவில் சென்றபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் லேசான காயத்துடன் டிரைவர் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story