கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை


கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2020 11:00 PM GMT (Updated: 27 Feb 2020 7:57 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி. வலியுறுத்தினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர், கிரு‌‌ஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிரு‌‌ஷ்ணகிரி டி.செங்குட்டுவன், வேப்பனப்பள்ளி பி.முருகன், தளி ஒய்.பிரகா‌‌ஷ், ஓசூர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் செல்லகுமார் எம்.பி. பேசியதாவது:-

குடிநீர்

எதிர்வரும் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை, வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு சாலை வசதிகளை செய்திட வேண்டும். மலைப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சாலைகளை அமைக்க வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சாராஜன், உ‌ஷாராணி, விஜயலட்சுமி, ரவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story