விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள செங்கன்பசுந்தலாவ் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன். இவர் தனது விவசாய நிலத்தில் விடுபட்ட 6 சென்ட் நிலத்தை உட்பிரிவு செய்து தர கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அப்போது உதவியாளராக பணியாற்றிய வெங்கடசுப்ரமணியன் என்பவர் இந்த பணியை மேற்கொள்ள ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக ரவிச்சந்திரன் தர்மபுரி லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் வெங்கட சுப்ரமணியனுக்கு ரூ.500-ஐ லஞ்சமாக கொடுத்தார்.

சிறை

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வெங்கடசுப்ரமணியனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவில் அரசு ஊழியர் வெங்கடசுப்ரமணியனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Next Story