மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம் நாகர்கோவிலில் நடந்தது
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பதாக கூறியும், எனவே வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. மேலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் உண்ணாவிரத போராட்டமானது நடத்தப்பட்டது.
போராட்டத்துக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் செல்வகுமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, டைசன் உள்பட பலர் பேசினார்கள்.
ராகுல்காந்தி வருகை
உண்ணாவிரத போராட்டத்தில் வசந்தகுமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை தொடங்கினார். வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு தொழிற்சாலைகளையும் அவர் கொண்டு வந்தார். அணைகளை கட்டி விவசாயம் பெருக வழி வகுத்தார். ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்.
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று தேர்தலின் போது பிரதமர் நரேந்திரமோடி கூறினார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. ஆன்லைன் விற்பனையும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு ஒரு காரணம் தான். தமிழகத்துக்கு மார்ச் மாதம் ராகுல்காந்தி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து காங்கிரசார் திரளாக சென்று அவரை வரவேற்க வேண்டும். ஆளுங்கட்சியே வியக்கும் அளவுக்கு ராகுல்காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜினாமா
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது. எனவே மத்திய அரசு உடனே ராஜினாமா செய்ய வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் நேரத்துக்கு ஏற்றார் போல பேசி வருகிறார்“ என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story