பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் வழங்கினார்


பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:30 PM GMT (Updated: 28 Feb 2020 5:02 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊக்கதொகையினை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு அரசு, பட்டு பூச்சி வளர்ச்சி துறையின் மூலம் பட்டு வளர்ப்பு செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் பட்டு பூச்சி வளர்த்து அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி முதலிடம் பிடித்த சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆயிப்பன் என்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கதொகையும், 2-ம் இடம் பிடித்த மதுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கதொகையும், 3-ம் இடம் பிடித்த பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்ற விவசாயிக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கதொகையும் என மொத்தம் மூன்று விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊக்கதொகையினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) ஜீவா, காவேரிப்பாக்கம் மற்றும் வாலாஜா தொழில் நுட்ப சேவை மையத்தினை சார்ந்த உதவி ஆய்வாளர்கள் சுருதி கீர்த்தனா, நாஜீரா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story