ரே‌ஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா; சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு


ரே‌ஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா;  சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 March 2020 3:30 AM IST (Updated: 29 Feb 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

தணிகை போளூர் கிராமத்தில் சு.ரவி. எம்.எல்.ஏ. புதிதாக அமைக்கப்படவுள்ள ரே‌ஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே தணிகை போளூர் கிராமத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி. எம்.எல்.ஏ. ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரே‌ஷன் கடைக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அதேபோல் தணிகை போளூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் ஏ.பி.எஸ்.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

1 More update

Next Story