குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாவட்டத்தில் 6 இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாவட்டத்தில் 6 இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேட் முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பேச்சாளர் இம்ரான் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். இதில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகள் அப்துல் காதர், தாஜூதீன், அமின், கமால் பாஷா, சுல்தான் முகைதீன், சிராஜ், இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை தலைவர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
நெல்லிக்குப்பம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் 19-ந்தேதி(அதாவது நேற்று) தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பஸ் நிலையத்தின் முகப்பு வாயிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் நிர்வாகிகள் பெரிய அளவிலான பந்தல் அமைத்தனர். இதை தொடர்ந்து, அங்கு பலவேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.
இதற்கு மாவட்ட செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். நகர செயலாளர் அப்துர் ரகுமான், நியமத் உசேன், இசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர தலைவர் முகமது ஷாபி கலந்து கொண்டு போராட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் கிளை தலைவர் முகமது ஷாபி நன்றி கூறினார். இதற்கிடையே, நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் நகராட்சி மேலாளர் அண்ணாதுரை மற்றும் நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபுவிடம் சிறிது நேரம் பேசினார்கள். அப்போது பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது என்று அவர்கள் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபுவிடம் தெரிவித்தனர். இதற்கிடையே, நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பிரபாகரன், நெல்லிக்குப்பம் போலீசில், பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில்
இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மகபு, யூசுப், அப்துல் ரஹ்மான், நிர்வாகிகள் ரஹத்துல்லா, சிராஜ், பாருக், சபிருல்லா, ராஜா, அப்துல்லா மற்றும் முஸ்லிம்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேச்சாளர் பாசில் நன்றி கூறினார். காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் மகபூப் பாஷா, மாவட்ட செயலாளர் இமாம் உசேன், துணை செயலாளர் அப்துல்லா ஜவஹர் அலி, நிர்வாகிகள் ஜாபர், இஸ்மாயில் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். முடிவில் நகர செயலாளர் கலிலுல்லா நன்றி கூறினார்.
பெண்ணாடம்
பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் முகமது யாசின் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர கிளை செயலாளர் முகமது ரபீக், தலைவர் அகமது அல்காச், பொருளாளர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் இம்ரான் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி
பண்ருட்டி பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட நிர்வாகி அப்துல் வஹாப் தலைமை தாங்கினார். நூர் முகைதின் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பேச்சாளர்கள் இலியாஸ், முகமது கவுஸ், ஜலால், ரகிமுல்லா ஆகியோர் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபை கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
இதில் கிளை நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ், முகமது சலீம், ஹபீர் அகமது, முகமது உமர், சாதிக், இஸ்மாயில், யூசுப், அப்துல் ரகுமான், நியாஸ், ரபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஷேக் கூடு நன்றி கூறினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story