மாவட்ட செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,607 கனஅடியாக அதிகரிப்பு + "||" + Water resonance echoes from Karnataka Dam: Mettur Dam

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,607 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,607 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,607 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மாதம் 25-ந் தேதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 29-ந் தேதி ஒகேனக்கல் வந்தடைந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 183 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை வினாடிக்கு 1,607 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட, அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் 105.14 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.17 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குன்னம் அருகே அணையில் தவறி விழுந்து டாக்டர், கல்லூரி மாணவர் சாவு
குன்னம் அருகே கொட்டரை அணையில் தவறி விழுந்து டாக்டர், கல்லூரி மாணவர் இறந்தனர். நண்பர்களுடன் அணையை சுற்றிப்பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது.
2. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் 42 அடியை கடந்தது
உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 42 அடியை கடந்தது.
4. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் 34 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்து விட்டது. இதனால் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
5. மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு நடந்து வந்த 2 மூதாட்டிகள், குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு நடந்து வந்த 2 மூதாட்டிகள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.