கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி செல்போன் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர்கள் சிலர், கல்லூரியில் இருந்து பேசுவதாகவும், மாணவர்களின் கல்வி கட்டணம் இன்னும் கட்டப்படாமல் உள்ளது என்றும், அதனை கட்டவில்லையென்றால் மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் கல்லூரிக்கு விரைந்து சென்று கேட்டபோது, கல்லூரி நிர்வாகத்தினர் யாரும் அவ்வாறு செல்போனில் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராயலாநகர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, அந்த செல்போன் அழைப்புகளின் நம்பர்களை வைத்து விசாரணை செய்தனர்.
அப்போது அவை போலியான செல்போன் நம்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் சிம்கார்டுகளை விற்பனை செய்த ஏஜென்ட்டான பெங்களூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பவரை பிடித்து விசாரித்து, அவர் அளித்த தகவலின் பேரில்,கர்நாடகாவைச் சேர்ந்த ஷேக் அகமது (27), கேரளாவைச் சேர்ந்த சாதிக் (42), அப்துல் லதீப்(54), ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிம்கார்டு விற்பனை செய்யும் ஏஜெண்டான செந்தில்குமார், வாடிக்கையாளர்களின் ஆவணங்களை வைத்துக்கொண்டு, அவர்கள் ஆவணங்களின் பெயரிலேயே போலியாக சிம் கார்டுகளை தயாரித்து, இந்த 3 பேரிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.
ஷேக் அகமது, சாதிக், அப்துல் லதீப் ஆகிய 3 பேரும் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பட்டியலை எடுத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் கல்விக்கட்டணம் கட்டவில்லை என்றும், கட்டணத்தை செலுத்துவதற்கு வசதியாக செல்போனில் ஒரு குறுந்தகவல் அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர்.
அந்த குறுந்தகவலை கிளிக் செய்து அதன் மூலம் பணத்தை கட்டுமாறு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவர்களிடமிருந்து போலியான சிம் கார்டுகள், செல்போன் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சபீர், நவ்ஷாத் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story