கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர்,
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ஒன்றிய தலைவர் கணேசன் முத்துசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் துணைத்தலைவர் ராஜலிங்கம், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் கணேசன், தலைவர் சண்முகானந்தம் உள்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
100 நாள் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். வேலை முடிந்தவுடன் ஊதியம் எவ்வளவு என்பதை அட்டையில் குறிக்க வேண்டும். ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும். 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். குண்டாற்றில் படர்ந்திருக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
அதிகாரிகளிடம் மனு
பகளவாடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் உள்ள காளிப்பட்டி ஜீவா நகர், முத்தமிழ் நகர், கண்ணனூர் ஊராட்சியில் உள்ள சின்னசேலம் பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நிலவும் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் அவர்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரேவதி, குணசேகரன், ஒன்றிய தலைவர் சரண்யா ஆகியோரிடம் கொடுத்து அதன்மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Related Tags :
Next Story