ஆப்பூர் ஊராட்சியில் 1,000 பெண்களுக்கு சேலைகள்


ஆப்பூர் ஊராட்சியில் 1,000 பெண்களுக்கு சேலைகள்
x
தினத்தந்தி 4 March 2020 3:43 AM IST (Updated: 4 March 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனின் மாமியாருமான சகுந்தலா அம்மாளின் நினைவு நாளையொட்டி படத்திறப்பு விழா ஆப்பூர் ஊராட்சியில் நடந்தது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்ட விவசாய அணி தி.மு.க. அமைப்பாளர் சந்தானம், தொழில் அதிபர் மதுசூதனன் ஆகியோரின் தாயாரும். செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனின் மாமியாருமான சகுந்தலா அம்மாளின் நினைவு நாளையொட்டி படத்திறப்பு விழா ஆப்பூர் ஊராட்சியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அவர் 1,000 பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர செயலாளர்கள் சண்முகம், நரேந்திரன். குன்றத்தூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிலம்புச்செல்வன். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story