நஷ்டத்தை ஈடுகட்ட மோனோ ரெயில்களை வாடகைக்கு விட திட்டம்

மும்பை வடலாவில் இருந்து செம்பூர் வரையிலான மோனோ ரெயில் திட்டம் மும்பையில் முதல் முறையாக கடந்த 2013-ம் ஆண்டு மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தொடங்கப்பட்டது.
மும்பை,
மோனோ ரெயில் திட்டம் 2-ம் கட்டமாக ஜேக்கப் சர்க்கிள் வரை கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு தற்போது ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்து வருகிறது. மோனோ ரெயில் சேவை பயணிகளிடம் போதுமான வரவேற்பை பெறாததால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது மோனோ ரெயில்களை வாடகைக்கு விட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ‘‘மோேனா ரெயிலை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை, மாலை வேளைகளை தவிர்த்து மற்ற நேரங்களில் பயணிகள் பிறந்தநாள் விழா மற்றும் திருமண வரவேற்பு விழா போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தி கொள்ள முடிவு செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு நஷ்டத்தை ஈடுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். விரைவில் பயணிகள் தங்கள் வீட்டு விஷேசங்களை மோேனா ரெயிலில் வைத்து கொள்ளலாம்’’ என்றார்.
Related Tags :
Next Story