ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசி னார்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அதிகார குழுவில் விவசாய தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை இடம் பெற செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இணைக்க வேண்டும்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விடுபட்டுள்ள வட்டங்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story