திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் மதுக்கடை அமைக்கப்படுவதை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் மதுக்கடை அமைக்கப்படுவதை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2020 5:00 AM IST (Updated: 5 March 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் மதுக்கடை அமைக்கப்படுவதை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுபாட்டில்களை கையில் ஏந்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருவிைடமருதூர் வீரசோழன் ஆற்றங்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு மதுக்கடை திறக்கப்பட இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மதுக்கடை திறக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மீண்டும் அப்பகுதியில் மதுக்கடை திறக்க அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கையில் மது பாட்டில்களை ஏந்தி மதுக்கடைக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர்.

சிவன் வேடம்

மேலும் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு சிவன் வேடம் அணிந்த ஒருவர் வந்து மதுக்கடை திறக்கப்படுவதை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் ரவிராஜ் தலைமை தாங்கினார். த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், பா.ம.க. முன்னாள் மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின், ஜோதிமலை இறைபணி கூட்ட நிறுவனர் திருவடிக்குடில்சாமிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராஜசேகர், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பாலா, பா.ஜனதா நகர தலைவர் ஜி.ராஜ், திருநாகேஸ்வரம் பா.ம.க. நகர செயலாளர் என்.தமிழ்மணி மற்றும் 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கெண்டனர். முடிவில் பா.ம.க. நகர செயலாளர் ரமே‌‌ஷ் நன்றி கூறினார்.

Next Story