மாவட்ட செய்திகள்

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா + "||" + Liquor Festival at Velayamakalyamman Temple

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடந்தது.
கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல், முளைப்பாரிக்கு விதை பாவுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கிராம பொது மக்களால் நடத்தப்பட்ட முளைப்பாரித் திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் நவதானிய விதைகள் தூவி துளிர் விட்டுள்ள இளம் பயிர்களை அலங் கரித்து தூக்கி சென்று மண்ணடி திடலில் இருந்து ஊர்வலமாக சென்று குளத்தில் கொட்டிச் சென்றனர். தொடர்ந்து குதிரை எடுப்பு திருவிழா மற்றும் பாட்ட கோவில் கல் பொங்கல் திருவிழாவும் நடந்தது.


மது எடுப்பு திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு திருவிழா கிராம பொதுமக்களால் நேற்று நடத்தப்பட்டது. மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில், தென்னம் பாலைகளை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடி திடல் சென்று, அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி வந்து அருகில் பாலைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் கொட்டிவிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் கிராம பொது மக்கள், விழாக்குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா.
2. ஸ்ரீவில்லிபுத்தூரில் பூக்குழி திருவிழா: கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் அக்னி சட்டி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
3. மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள்
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பெரிய குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் குவிந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. ஜெகதாபி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஜெகதாபி மாரியம்மன் கோவிலில் நடந்த மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். திருவிழாவையொட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.