தவறவிட்ட ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி


தவறவிட்ட ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 March 2020 3:15 AM IST (Updated: 5 March 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தவறவிட்ட ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் தாட்சாயணி (வயது 50). இவர் கடந்த 12-ந்தேதி திருவள்ளூரில் உள்ள வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வந்தார். அப்போது அவர் தனது ஏ.டி.எம். கார்டை தவறவிட்டுவிட்டார். 

இதைத்தொடர்ந்து கடந்த 26-ந்தேதி சென்னையில் உள்ள அந்த வங்கிக் கிளையின் அலுவலத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் கணக்கில் இருந்த ரூ.2 லட்சம் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story