நாமக்கல், கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்


நாமக்கல், கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்
x
தினத்தந்தி 5 March 2020 5:30 AM IST (Updated: 5 March 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்.

திருச்சி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அங்கிருந்து அவர் கார் மூலம் மாலை 4 மணிக்கு திருச்சி வருகிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதேபோல் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் திருச்சியில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கும் அவர், 7-ந் தேதி(சனிக்கிழமை) காலை திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

போலீசார் பாதுகாப்பு

அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். விமானநிலையத்துக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. 

Next Story