விருதுநகர் மாவட்டத்தில் 23,563 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்

பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 23,563 பேர் எழுதினர்.
விருதுநகர்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 219 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 23,563 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,850 பேர் மாணவர்கள், 12,713 பேர் மாணவிகள்.
அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 21 மையங்களில் 4685 பேர் தேர்வு எழுதினர். இதில்2260 பேர் மாணவர்கள். 2425 பேர் மாணவிகள். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் தேர்வு எழுதிய 6,586 பேரில் 3025 பேர் மாணவர்கள். 3561 பேர் மாணவிகள். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 22 மையங்களில் 5758 பேர் தேர்வு எழுதினர். இதில் 2647 பேர் மாணவர்கள். 3111 பேர் மாணவிகள்.
சிவகாசி கல்வி மாவட்டத்தில் 25 மையங்களில் 6534 பேர் தேர்வு எழுதினர். இதில் 2718 பேர் மாணவர்கள். 3816 பேர் மாணவிகள். மாவட்டம் முழுவதும் தேர்வு நடந்த 94 மையங்களிலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கலெக்டர் கண்ணன் விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் ஆய்வு நடத்தினார்.
Related Tags :
Next Story