திருச்செங்கோட்டில், நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தகவல்


திருச்செங்கோட்டில், நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 5 March 2020 12:57 PM IST (Updated: 5 March 2020 12:57 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பயிற்சி வகுப்பு
நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ேமலும் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு போட்டி தேர்வுகளுக்கு மாவட்ட ேவலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுகளுக்கான ஏராளமான பயனுள்ள கையேடுகள் வைக்கப் பட்டுள்ளன.

நாளை மறுநாள் நடக்கிறது
மேலும் மாதிரி போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு பணி மட்டுமின்றி தனியார் துறையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் வகையில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாளை மறுநாள் (சனிக் கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்துகின்றன.

இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான கல்வித் தகுதி உடையோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story