குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 10-வது நாளாக தர்ணா போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 10-வது நாளாக தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2020 4:00 AM IST (Updated: 6 March 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவில் நாகை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 10-வது நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

குத்தாலம்,

மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவில் நாகை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 10-வது நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு பள்ளிவாசல் முத்தவல்லி சபிருதீன் தலைமை தாங்கினார். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் கிளியனூர், வதிஸ்டாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் 9-வது நாளாக அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ‌ஷாஜகான், மாவட்ட பொருளாளர் முகமதுபாசித் உள்பட 11 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story