இந்தியாவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கணவாய்மேடு பகுதியில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் மெகராஜ், ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
12 புதிய கல்லூரிகள்
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய கலைக்கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-
கிராமப்புற மாணவர்கள் தகுதியும், திறமையும் உள்ளவர்கள். ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் அவர்களின் உயர்கல்வி தடைபட்டு விடுகிறது. எனவே அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி அளிக்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 65 புதிய அரசு கலைக்கல்லூரிகளை தொடங்கி வைத்தார். அவரது வழியில் ஆட்சி நடத்தும் நாங்களும் புதிதாக 12 அரசு கலைக்கல்லூரிகளை தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக இருந்தது. தற்போது கல்வித்துறையில் ஏற்படுத்தி உள்ள புரட்சி காரணமாக தமிழகம் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. தற்போது தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
அமைதி நிலவும்
மாணவர்களுக்கு பெற்றோர் மடிக்கணினி வாங்கி கொடுக்கிறார்களோ இல்லையோ, இந்த அரசு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை விலையில்லாமல் வழங்கி வருகிறது. எத்தனையோ துறைகள் இருந்தாலும் கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம்.
எந்த ஒரு மாநிலம் கல்வியில் சிறந்து விளங்குகிறதோ, அந்த மாநிலம் வளம் பெறும். அங்கு அமைதி நிலவும். பொருளாதாரம் தானாக வந்து சேரும். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், புத்தகம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், உயர்கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story