மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 6 March 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

சூளகிரி அருகே உள்ள சித்தாண்டப்பள்ளி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நசீர் அகமது முன்னிலை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சித்தாண்டப்பள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். சித்தாண்டப்பள்ளி கிராமத்திற்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

இழப்பீடு

விவசாயம் செய்யும் வகையில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து துரை ஏரி வழியாக கிரு‌‌ஷ்ணகொண்டப்பள்ளி, சித்தாண்டப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, நேரலகிரி, வேப்பனப்பள்ளி வரை வாய்க்கால் நீடிப்பு செய்து, தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணிஒட்டு மற்றும் அழியாளம் அணைத்திட்டத்தினை, 200 அடியாக உயர்த்தி சூளகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினை போக்க வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதில், கிளை சங்க தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் வரதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story