அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க ரங்கசாமி முயற்சி நாராயணசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க ரங்கசாமி முயற்சிக்கிறார் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.வி.சுப்பிரமணியனுக்கு எனது வாழ்த்துக்கள். அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக 4¾ ஆண்டுகள் இருந்துள்ளார். அவரது தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். அதன்பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரசுக்கு வெற்றியே கிடைத்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கவர்னர் கிரண்பெடி அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புவதை தவிர வேறு எந்தவேலையையும் செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவராக செயல்படுகிறார். சட்டபேரவை நடைபெறும் போது வருவதில்லை, மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை.
ரகசிய சந்திப்பு
புதுவையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ரகசியமாக சந்தித்து வருகிறார். மக்களுக்கு ஆதரவான பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதனை செய்யாமல் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அவரின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டும். இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறு துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story