நெல்லையில் சேதுராம பாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சி: 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் - ஏ.எம்.மூர்த்திதேவர் வழங்கினார்
நெல்லையில் நடந்த சேதுராமபாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஏ.எம்.மூர்த்திதேவர் வழங்கினார்.
நெல்லை,
நெல்லை சி.என்.கிராமத்தில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று மா.சேதுராமபாண்டியன் 5-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் ஊர்வலமாக வந்து சேதுராம பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய இயக்க தலைவர்கள் சேதுராம பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 10 பேருக்கு இலவச ஆட்டோக்கள், 2,500 பெண்களுக்கு இலவச சேலைகள், இஸ்திரி பெட்டிகள், மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கை, கால்கள், 3 சக்கர சைக்கிள்கள், சைக்கிள்கள் மற்றும் தென்னங்கன்றுகள் உள்பட 3 ஆயிரம் பேருக்கு ஏ.எம்.மூர்த்திதேவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில பொதுச்செயலாளர் ராமசுப்பு, துணை பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் கொம்பையா பாண்டியன், மாநில இளைஞர் அணி செயலாளர் வைரதேவர், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story