பணியிடங்களில் பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


பணியிடங்களில் பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2020 3:45 AM IST (Updated: 7 March 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

பணியிடங்களில் பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கோரி, புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் தேவமணி தலைமை தாங்கினார். தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரிக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியை குறைக்கக்கூடாது. அனைத்து பணியிடங்களிலும் பாலியல் புகார் குழு அமைத்து அக்குழுவில் தொழிற்சங்க பெண் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story