அதிக மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை மந்திரி சுரேஷ்குமார் தகவல்


அதிக மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை   மந்திரி சுரேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 7 March 2020 11:30 PM GMT (Updated: 2020-03-08T02:25:06+05:30)

அதிகளவில் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு, 

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசுக்கு இதுவரை சுமார் 3,500 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்த வைரசுக்கு இதுவரை 31 ேபர் பாதிக்கப்பட்டு உள்ள னர்.

அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பள்ளி-கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அதிக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், அத்தகைய பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வரையில் ஒரு தேர்வு கூட எழுதாத 30 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் ஆபத்து இருப்பதால், ஒரு அறையில் அதிகபட்சமாக 15 மாணவர்கள் மட்டுமே ேதர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளி அதிகமாக விடப்பட்டுள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது”்

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றறிக்கை

இதுதொடர்பாக கர்நாடக அரசின் கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story