குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனிதசங்கிலி போராட்டம்


குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2020 5:00 AM IST (Updated: 9 March 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரியில் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கிரு‌‌ஷ்ணகிரி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியவர்களை கண்டித்தும், இந்த வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்த தவறிய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை பாதுகாப்பு இயக்கம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் கிரு‌‌ஷ்ணகிரியில் நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் அண்ணா சிலை அருகில், நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் நூர் முகம்மத் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி வரவேற்றார். ஐ.யூ.எம்.எல். மாவட்ட பொறுப்பாளர் அன்வர் பா‌ஷா, ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட தலைவர் இர்‌ஷாத் அகமத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமத் கலீல், ஜம் இய்யத் உலமா மாவட்ட தலைவர் அல்தாப் அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரு‌‌ஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கண்டன கோ‌‌ஷங்கள்

நிகழ்ச்சியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறிய காவல் துறையை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில், டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா‌‌ஷ் உசைனி, ‌ஷாஹி மஸ்ஜித் தலைவர் முஸ்தாக் அகமத், பூரா மஸ்ஜித் தலைவர் காதர் உசேன், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா, காங்கிரஸ் பிரமுகர் ஆறுமுக சுப்பிரமணி, முபாரக், முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story