மேட்டூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


மேட்டூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 2020-03-09T03:20:10+05:30)

மேட்டூரில் குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

மேட்டூர்,

மேட்டூர் காவிரி பாலம் பகுதிைய சேர்ந்தவர் தினேஷ் என்ற கணேஷ் (வயது 23). இவர் கடந்த மாதம் 6-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அந்த நபர் பணம் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தினேஷ் அரிவாளால் அவரை வெட்டி விட்டார். இந்த வழக்கில் மேட்டூர் போலீசாரால் தினேஷ் கைது செய்யப்பட்டு் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

இவர் மீது மேட்டூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தினேஷ் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு பரிந்துரை ெசய்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், சேலம் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு இது தொடர்பாக பரிந்துரைத்தார். அதன்பேரில் தினேஷ் என்ற கணேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள தினேசிடம் போலீசாரால் வழங்கப்பட்டது.

Next Story