நாகர்கோவிலில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி கைது
நாகர்கோவிலில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் பெருமாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்தார். அவருடன் ஒரு வாலிபரும் இருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
கணவன், மனைவி கைது
இதையடுத்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளம்பெண் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவரை வடசேரி ஓட்டுபுற தெருவை சேர்ந்த அழகுமுத்து (வயது 60) மற்றும் அவரது மனைவி விஜிலா குமாரி (52) ஆகியோர் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுபோல், பல இளம்பெண்களை பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்காக கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஆசாரிபள்ளத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பிடிபட்ட இளம்பெண்ணை நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story