மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நடுவானில் பறந்த விமானத்தில் தொழிலதிபர் திடீர் சாவு
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நடுவானில் பறந்த விமானத்தில் இருந்த தொழிலதிபர் திடீரென இறந்தார். பெற்றோருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினமும் ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 5 மணியளவில் மலேசியாவில் இருந்து புறப்பட்டு காலை 8.25 மணிக்கு திருச்சியை வந்தடையும். பின்னர் மீண்டும் மலேசியாவிற்கு காலை 9.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதன்படி இந்த விமானம் நேற்று வழக்கம்போல் அதிகாலை 5 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் சென்னையா (வயது 65) என்பவர் உள்பட 143 பயணிகள் பயணம் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் இருந்த சென்னையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
சாவு
இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த முதல் உதவி அதிகாரி மற்றும் அதே விமானத்தில் பயணம் செய்த டாக்டர் ஒருவரின் உதவியுடன் சென்னையாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. சில நிமிடங்களில் சென்னையா உயிரிழந்தார். இதனை உறுதி செய்த டாக்டர்கள், வேறு எந்த விமான நிலையத்திலும் விமானத்தை தரையிறக்காமல், நேரடியாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் முனைய மேலாளர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முதல் உதவிக்கான பொருட்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்
அந்த விமானம் காலை 8.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னையாவை பரிசோதனை செய்தனர். அப்போது சென்னையா உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததும் தெரியவந்தது. அவருடன் வேறு யாரும் பயணம் செய்யாத நிலையில், அவரை பற்றிய எந்த விவரமும் விமான நிறுவனத்திற்கு தெரியாத நிலை இருந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அவரது உடலை விமானத்தில் இருந்து இறக்கி, ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதுபற்றி திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உடனடியாக அங்கு வந்து விமான நிறுவனத்தினரிடம் கடிதம் பெற்று, இறந்தவர் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டார்.
பெற்றோருக்கு தர்ப்பணம்
இதற்கிடையே சென்னையா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாக்கியலட்சுமி, திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, சென்னையாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையா, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் என்பதும், மலேசியாவில் இருந்து அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்பவர் என்பதும், தற்போது அவருடைய பெற்றோருக்கு ராமேசுவரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து வந்ததும், தெரியவந்தது.இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த விமானம் பயணிகளுடன் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 11 மணியளவில் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பயணி இறந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story