சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை - போக்சோ கோர்ட்டு உத்தரவு


சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை - போக்சோ கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-10T01:12:58+05:30)

அருப்புக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை அருகே உள்ளது சத்தியவாணி நகர். அந்த பகுதியை சேர்ந்தவர் விசுவாசம் (வயது50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 24.9.2015 அன்று 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசுவாசத்தை கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பரிமளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட விசுவாசத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Next Story