தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 March 2020 4:00 AM IST (Updated: 10 March 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கோர்ட்டில் நக்சலைட் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

தர்மபுரி,

நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர் காளிதாஸ். தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தர்மபுரி முதன்மை சார்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. திருச்சி சிறையில் உள்ள காளிதாசிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story