நில அபகரிப்பை தடுக்க போலீசாருக்கு பயிற்சி கவர்னர் கிரண்பெடி உத்தரவு

நில அபகரிப்பை தடுக்க வருவாய்துைற ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அருண், வில்லியனூர் துணை கலெக்டர் சஷ்வத் சவுரப் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
போலீசாருக்கு பயிற்சி
அப்போது கலெக்டர் அருண் நில அபகரிப்பு புகார்கள் குறித்து விளக்கமளித்தார். இந்த புகார்கள் மீதான நடவடிக்கைக்காக கவர்னர் கிரண்பெடி ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக பிராந்திய மொழிகளில் நில அபகரிப்பு தொடர்பாக செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என தனித்தனியாக பிரித்து நோட்டீசுகள் அச்சடித்து பொதுமக்களிடம் வழங்குமாறு கூறினார். வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தினார்.
ஒரே குடையின்கீழ்...
நில அபகரிப்பு புகார்களுக்கு ஒப்புகை சீட்டு அளிப்பது, சம்பவ இடத்தை பார்வையிடுவது, அமைதியான சூழலை உருவாக்குவது, விசாரிப்பது, கூட்டங்கள் நடத்தி அதை பதிவு செய்யவும் அதிகாரிகளிடம் கூறினார்.
ஒரே குடையின்கீழ் நில அபகரிப்பு தடுப்பு குழுவினை கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார். பறக்கும் கேமரா மூலம் நிலத்தை அளவீடு செய்வது, மறுசர்வே நடத்துவது, ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு கவர்னர் பாராட்டினார்.
அதன்பின் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்ட கல்வியியல் கல்லூரியிலும் கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார்.

Related Tags :
Next Story