தொண்டி அருகே, கடலில் இலங்கை படகு மீட்பு


தொண்டி அருகே, கடலில் இலங்கை படகு மீட்பு
x
தினத்தந்தி 10 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-11T05:24:25+05:30)

தொண்டி அருகே கடலில் இலங்கை படகு மீட்கப்பட்டது.

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டிணம் கடற்கரையில் இருந்து சிறிது தொலைவில் நடுக்கடலில் இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று மிதப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் சென்ற போலீசார் கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த படகை மீட்டு, மற்றொரு படகில் கட்டி தொண்டி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த படகானது, இரண்டு நாட்கள் கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து வந்தவர்களின் படகாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.மேலும் அந்த திருவிழாவிற்கு வந்து காணாமல் போன இலங்கையை சேர்ந்த 7 படகுகளை இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்பரப்பில் மீட்டு இலங்கை கடலோர காவல் படையிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இலங்கை படகு குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.


Next Story