ரூ.22½ கோடியில் மஞ்சளாற்றில் புனரமைப்பு பணி அதிகாரி ஆய்வு


ரூ.22½ கோடியில் மஞ்சளாற்றில் புனரமைப்பு பணி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 12 March 2020 4:30 AM IST (Updated: 12 March 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மஞ்சளாற்றில் ரூ.22½ கோடியில் புனரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் ரூ.22 கோடியே 64 லட்சம் மதிப்பில் மஞ்சளாற்றின் குறுக்கே 8 கதவணைகள், 38 மதகுகள், 8 வடிகால் மதகுகள், 1 படுக்கையணை மற்றும் 1 கீழ் குமிழி ஆகியவற்றை புனரமைப்பு செய்து 35 கி.மீட்டர் தூரம் வரை மஞ்சளாற்றை தூர்வாரி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிகாரி ஆய்வு

இந்த பணிகளை நேற்று தஞ்சை கீழ்க்காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மேக்கிரிமங்கலம், சென்னியநல்லூர், தொழுதாலங்குடி, அசிக்காடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் பயனாக்கம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மஞ்சளாற்றில் நடைபெற்று வரும் நீர்வள, நிலவள திட்ட பணிகளால் 6 ஆயிரத்து 450 எக்டேர் விளைநிலங்களும், 40 கிராமங்களும் பயன்பெறும். மேலும் உரிய நேரத்தில் கடைமடை பகுதிகளுக்கு பாசனநீர் செல்லும். இதை உறுதி செய்யும் வகையில் தற்போது பணிகளை ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது காவிரி வடிநில கோட்ட (கிழக்கு) செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளர்கள் மரியசூசை, சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story