சென்னை குடிநீர் வாரியத்தில் மகளிர் தின விழா நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன

சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.
சென்னை,
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரனின் துணைவியார் சந்திரிகா மகளிர் தின விழாவுக்கு தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் பிரபு சங்கரின் துணைவியார் டாக்டர் நவீனா, பொறியியல் இயக்குனர் மதுரை நாயகத்தின் துணைவியார் பரிமளா ஆகியோர் கலந்து கொண்டு மகளிரின் பெருமைகள் குறித்து பேசினர். விளையாட்டு, ஆடல், பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் டாக்டர். சத்தியபாமா, மருத்துவத்தின் பயன்கள், யோகா, உடற்பயிற்சிகள் மூலம் பெறும் பயன்கள் குறித்தும், ஓவியா, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், அருள்மொழி ராமநாதன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், ஜெயஸ்ரீ வெங்கடேசன், நீர் மேலாண்மை மற்றும் பெண்கள் மேம்பாடு குறித்தும், டாக்டர் எஸ்.ரேவதி, பெண்களின் பெருமை குறித்தும் பேசினார்கள். வாரிய செயற்பொறியாளர்கள் பாரதி, சுகந்தி, ஸ்ரீதேவி உள்ளிட்ட வாரியத்தில் பணியாற்றும் 300 பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொறியாளர் புவனேஸ்வரி வரவேற்றார். வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் டி.பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story