குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு


குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 12 March 2020 4:30 AM IST (Updated: 12 March 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அருமனையில் இருந்து தேமானூர் வரையிலான 4.4 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்கும் ஒப்பந்தத்தை ஆர்.பி.ஆர். நிறுவனம் பெற்றிருந்தது. தற்போது ரூ.2 கோடியே 18 லட்சத்தில் அங்கு சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

இந்த பணி தரமானதாக நடைபெறுகிறதா? என நெல்லையில் இருந்து வந்த நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வு

இதேபோல் களியல்-நெட்டா, களியல்-பேச்சிப்பாறை சாலைகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்போது சில பகுதிகளில் அவர்கள் கம்பியால் தோண்டி சாலையை ஆய்வு செய்தனர். இந்த பணியில் கோட்ட பொறியாளர் பாஸ்கர், உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Next Story