ஆண்டிப்பட்டி அருகே, செல்போனில் ஆபாச படத்தை காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


ஆண்டிப்பட்டி அருகே, செல்போனில் ஆபாச படத்தை காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-12T23:04:13+05:30)

ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் ஆபாச படத்தை காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி என்பவரின் மகன் பவுன்ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர், 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும்போது, வழி மறித்து தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜை கைது செய்தனர்.

Next Story