வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-13T02:56:06+05:30)

சிவகங்கையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது25). இவரும் சிவகங்கை கொட்டகுடி பகுதியை சேர்ந்த திவாண்(35) என்பவரும்சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் சிவகங்கை பிள்ளைவயல் காளிகோவில் பகுதியை சேர்ந்த முருகன்(35) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தங்க சங்கிலி, செல்போன் மற்றும் பணம் ஆகியவைகளை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் 2 பேரையும் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இதே போல் சிவகங்கையை அடுத்த அழுபிள்ளைதாங்கி பகுதியை சேர்ந்தவர் அசோக் என்ற முத்துபாண்டி (21). இவரும் கடந்த ஜனவரி மாதம் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 3 பேரும் தற்போது மதுரை சிறையில் இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story