பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் மூடிய அறையில் சாட்சிகளிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் மூடிய அறையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தி்ல் ஈடுபட்டதாக கைதானார். இதே போல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியும் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு மூடிய அறையில் அவர்களிடம் விசாரணை நடந்தது.
பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது. சாட்சிகளும் அங்கு விசாரிக்கப்பட்டனர். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி பரிமளா ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story