பாலக்கோட்டில் எருதாட்டம் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் காயம்

பாலக்கோட்டில் நடந்த எருதாட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமியையொட்டி புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அதனை தொடர்ந்து எருதாட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று எருதாட்டம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதனை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் கிராமத்தின் சார்பாக காளைகளை மாரியம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து வந்து ஓட விட்டனர். காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு விரட்டி சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பாஷா (வயது 30), மணிகண்டன் (28) மற்றும் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் ஆகிய 3 பேரை மாடு முட்டியதால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் பாலக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். எருதாட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Tags :
Next Story