வெண்ணந்தூர், சேந்தமங்கலம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
வெண்ணந்தூர், சேந்தமங்கலம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி தொட்டியவலசு ஊராட்சியில் ரூ.41 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 2½ கி.மீ. தொலைவிற்கு சாலை மேம்பாடு பணி, ஆனந்தகவுண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மல்லூர், வெண்ணந்தூர் முதல் ஆனந்தகவுண்டம்பாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர் ஏரி அருகே பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வெண்ணந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வரும் பணி ஆகியவைகளை பார்வையிட்டார்.
குளம் தூர்வாரும் பணி
செம்மாண்டம்பட்டி ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளி ஒருவருக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி, மதியம்பட்டி ஊராட்சியில் ரூ.24 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் தாய்த்திட்டத்தின் கீழ் மதியம்பட்டி சிறுபாசன குளம் தூர்வாரும் பணி உள்ளிட்டவைகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், வனிதா, வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா, ஒப்பந்ததாரர் பிரகாசம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து மண்மலை முருகன் 4 ரோடு சந்திப்பு வரையில் 2.32 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்பட்டு வரும் பணியினை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
இதேபோல் ரூ.48 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பச்சுடையாம்பட்டி புதூர் முதல் ராசாகவுண்டனூர் வரை நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணியையும், கொண்டமநாயக்கன்பட்டியில் தனியார் இடங்களில் ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் அசோலா தீவன வளர்ப்பு நடைபெற்று வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும், அக்கியம்பட்டி துணை மின்நிலைய வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார். அதேபோல் பச்சுடையாம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கான கட்டிடம் கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பொம்மசமுத்திரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடத்தில் உணவுக்கூடம் கட்டப்பட்டு வருவது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பராஜன், ஜெயகுமரன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story