திருப்பூரில் மத்திய அதிவிரைவுப்படையினர் கொடி அணிவகுப்பு
திருப்பூரில்அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில்மத்திய அதிவிரைவுப்படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் தொடர் முழக்க போராட்டம் 29-வது நாளாக நேற்று நடைபெற்றது. மேலும் பல்வேறு அமைப்பின் சார்பில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்து வருகிறது.
மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் மாநகர போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மத்திய அதிவிரைவுப்படையினர் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் திருப்பூர் குமரன் சிலை முன்பு மத்திய அதிவிரைவுப்படையினர் மற்றும் பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசாரின் கொடி அணிவகுப்பு தொடங்கியது.
இதில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் நவீன்குமார், சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ், மீனாகுமாரி, கணபதி மற்றும் போலீசார் பங்கேற்றனர். துணை கமாண்டர் சிங்காரவேல் தலைமையில் மத்திய அதிவிரைவுப்படையினர் 120 பேர் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இந்த கொடி அணிவகுப்பில் வஜ்ரா வாகனங்கள் முன்செல்ல போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். குமரன் ரோடு வழியாக சென்று பழைய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. மத்திய அதிவிரைவுப்படையினர், ஆயுதப்படையினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார் என மொத்தம் 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் கூறும்போது, ‘திருப்பூரில் போராட்ட சூழ்நிலையால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், வர்த்தகர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. துணை கமாண்டர் தலைமையில் 2 உதவி கமாண்டர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 120 பேர் கொண்ட மத்திய அதிவிரைவுப்படை திருப்பூருக்கு வந்துள்ளது. திருப்பூர் மாநகரில் முகாமிட்டு மாநகர போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள், வர்த்தகர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்றார்.

Related Tags :
Next Story