மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா
மேலூர் அருகே திருவாதவூர், வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் கலந்து கொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழாக்கள் நடைபெற்றன.
மேலூர்,
மேலூர் பகுதியில்இந்த ஆண்டு பருவ மழை பொழிந்து திருவாதவூர், வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்மாய் முழு கொள்ளளவை எட்டின. இதனால் அதிகமான மீன் குஞ்சுகளை கிராமத்தின் சார்பில் வாங்கி கண்மாயில் வளர்த்து யாரும் பிடித்துவிடாமல் பாதுகாத்து வந்தனர்.
பாரம்பரிய வழக்கப்படி மீன்பிடி திருவிழா நடைபெறும் என சுற்று வட்டார கிராம பொது மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மீன்பிடி திருவிழாக்கள் நேற்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவில் பொதுமக்கள் திரண்டு வந்து கண்மாய் கரையில் படுத்திருந்தனர்.
அதிகாலையில் கண்மாயில் இறங்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். அவ்வாறு பிடித்து வந்த மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்த பின்பு சமைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்மாயில் மீன்களை தனிநபருக்கு குத்தகைக்கு விடாமல் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மீன்களை பிடித்து செல்வதால் விவசாயம் செழித்து கிராமத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
நேற்று ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாக்களில் மீன்களை இலவசமாக பிடித்துச்சென்ற நிலையில் மேலூர் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் வீடுகளில் மீன் சமையல் வாசனை நிலவியது.

Related Tags :
Next Story