முதல்-அமைச்சரை ஓவியமாக வரைந்த மாணவனுக்கு பாராட்டு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர்எதிரே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன், ஒரு படத்தை அடிக்கடி உயர்த்தி காண்பித்தான்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர்எதிரே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன், ஒரு படத்தை அடிக்கடி உயர்த்தி காண்பித்தான். இதனால் முதல்-அமைச்சரின் கவனம் அங்கு செல்ல, அதையடுத்து அனைவரும் அங்கு பார்த்தனர்.
அங்கு முதல்-அமைச்சரை ஓவியமாக வரைந்து, அந்த மாணவன் கையில் வைத்து இருந்தான். அதை பார்த்ததும் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம் எழுந்தது. இதற்கிடையே தனது பேச்சை முடித்த முதல்-அமைச்சர், மாணவனை மேடைக்கு அழைத்தார். உடனே அந்த மாணவனும் உற்சாகமாக ஓவியத்துடன் மேடைக்கு வந்தான். அவனிடம் முதல்-அமைச்சர் விசாரித்தார். அப்போது அவன் தனது பெயர் கவின் என்றும், அது தான் வரைந்த ஓவியம் என்றும் கூறினான்.
மேலும் முதல்-அமைச்சரின் உருவத்தை, அவன் தத்ரூபமாக வரைந்து இருந்தான். இதனால் அவனின் ஓவியத் திறமையை முதல்-அமைச்சர் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் பணமுடிப்பு வழங்கினார். அப்போது அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பியதால், அந்த இடமே அதிர்ந்தது.
Related Tags :
Next Story